/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபிராமி கல்வி நிறுவனங்கள் ஆண்டு விழா கோலாகலம்
/
அபிராமி கல்வி நிறுவனங்கள் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : ஜன 25, 2025 11:06 PM

கோவை: ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா, அதன் நிறுவனர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குனர் மற்றும் நடிகர் ராஜ்மோகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, இரண்டு வாரங்களாக நடைபெற்ற 20க்கும் மேற்பட்ட விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.
ஸ்ரீ அபிராமி அலைட் ஹெல்த் செயின்ஸ் கல்லுாரியின், புதிய நான்கு பட்டப் படிப்புக்கள் மற்றும் நர்சிங் கல்லுாரியின் புதிய நர்சிங் எலைட் படிப்புகளை துவக்கி வைத்தார்.
அபிராமி மருத்துவமனையில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட நோய்கண்டறிதல் மையமும் திறந்து வைக்கப்பட்டது.
விழாவில், அபிராமி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர்.
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் நிறுவன இயக்குனர் டாக்டர் குந்தவை, நிறுவனத்தின் இயக்குனர்களான டாக்டர்கள் செந்தில்குமார், பாலமுருகன், உமாதேவி, சுசாரித்தா மற்றும் டீன், முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

