/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாம்பியன்ஷிப் போட்டியில் அபிராமி நர்சிங் சாதனை
/
சாம்பியன்ஷிப் போட்டியில் அபிராமி நர்சிங் சாதனை
ADDED : ஜூன் 04, 2025 01:23 AM

கோவை; தேசிய இளைஞர் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஸ்ரீ அபிராமி கல்லுாரி மாணவர்கள், பல்வேறு வெற்றிகளை குவித்து, சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, கோவா, கேரளா உள்பட ஏழு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 697 வீரர்கள், வெவ்வேறு பிரிவுகளில் பங்கு பெற்றனர்.
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவன மாணவர்கள் இறகுப்பந்து, குத்துச்சண்டை, சதுரங்கம் மற்றும் கேரம் போட்டிகளில் எட்டு தங்க பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஜோயல் எமர்சன், உதவி உடற்கல்வி இயக்குனர் ஐஸ்வர்யா ஆகியோரை, கல்லுாரி நிறுவனர் டாக்டர் பெரியசாமி, இயக்குனர்கள் டாக்டர் செந்தில்குமார் மற்றும் டாக்டர் பால முருகன் ஆகியோர் பாராட்டினர். கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.