/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அபியாசா டான்ஸ் அகாடமி' ஆண்டு விழா; பரதநாட்டிய கலைஞர்களுக்கு விருது
/
'அபியாசா டான்ஸ் அகாடமி' ஆண்டு விழா; பரதநாட்டிய கலைஞர்களுக்கு விருது
'அபியாசா டான்ஸ் அகாடமி' ஆண்டு விழா; பரதநாட்டிய கலைஞர்களுக்கு விருது
'அபியாசா டான்ஸ் அகாடமி' ஆண்டு விழா; பரதநாட்டிய கலைஞர்களுக்கு விருது
ADDED : நவ 24, 2024 11:54 PM

கோவை; 'அபியாசா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமியின்' ஆண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக சிறந்த பரதநாட்டிய கலைஞர்கள் மூவருக்கு விருது வழங்கப்பட்டது.
கோவை, சாய்பாபா காலனியில், கலைமாமணி லாவண்யா சங்கர் நிறுவிய, 'அபியாசா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி' செயல்பட்டு வருகிறது. இதன், 20ம் ஆண்டு விழா கொண்டாட்டம், கோவை கிக்கானி பள்ளி கலையரங்கில், நவ., 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது.
முதல் நாள், 'ஜகன்வி புனித நதி' என்ற தலைப்பில் லாவண்யா சங்கரின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரண்டாம் நாள் 'கதாமிர்தம் - ஒப்பீடுகள்' என்ற தலைப்பில் அபியாசா மாணவர்களின் குழு நடன நிகழ்ச்சி நடந்தது.
இந்த நடனம், கதாமிர்தம், நீதிக்கதைகள் மற்றும் புராணக் கதைகளில் உள்ள நன்னெறிக் கொள்கைகளுக்கும், சீலக் கொள்கைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இதையடுத்து, வருடாந்திர 'அபியாசா நிருத்திய வர்தனி விருது' பரதநாட்டியக் கலைஞர்கள் பார்ஷ்வநாத் உபாத்யாயா, ஸ்ரீமதி சுருதி, ஆதித்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலாசார ஊக்குவிப்பாளர் டாக்டர் அனிதா ரத்னம், பரத நாட்டிய கலைஞர், சென்னை அப்பல்லோ மருத்துவமனை துணை தலைவர் டாக்டர் ஸ்ரீநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.