UPDATED : ஜூலை 18, 2026 05:22 PM
ADDED : ஜூலை 18, 2026 04:52 PM
சுந்தராபுரம்: சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் அபிராமி நெக்ஸ்ட் கேர் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு திறப்பு விழா, மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பெரியசாமி தலைமையில் நடந்தது.
அமைச்சர்கள் விக்னேஷ், சம்பத்குமார் ஆகியோர் மருத்துவ உள்கட்டமைப்பை திறந்து வைத்தனர்.
அமைச்சர் விக்னேஷ் பேசுகையில்,''அபிராமி நெக்ஸ்ட் கேர் துவக்கத்தின் மூலம் இம்மருத்துவமனை மேலும் பல சாதனைகளை படைத்து, புதிய உயரங்களை எட்டவேண்டும்,'' என்றார்.
அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில்,''சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சையில் இம்மருத்துவமனை சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. அபிராமி நெக்ஸ்ட் கேர், இப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும், என்றார்.
தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை இருவரும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து மருத்துவமனை மற்றும் கல்வி குழும வளாகத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தனர்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்களான டாக்டர்கள் குந்தவைதேவி, செந்தில்குமார், பாலமுருகன், உமாதேவி, சுசரித்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
