UPDATED : ஜூலை 18, 2026 08:07 PM
ADDED : ஜூலை 18, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
கோவை: பன்னீர்மடை, அட்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது. பள்ளி தலைவர், துணைத் தலைவர் மற்றும் பல்வேறு மன்றங்களின் தலைவர்கள் வாக்குப்பதிவு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பள்ளியின் செயலாளர் பட்டாபிராமன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவர்கள் உறுதிமொழி ஏற்று, தங்கள் மன்றங்களின் அடையாளச் சின்னங்களை வெளியிட்டனர்.
தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் நடந்தது. பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் பதவியேற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
புட்நோட்: பன்னீர்மடை அட்சயா அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது.
