ADDED : ஜன 21, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; கொலை மற்றும் போக்சோ வழக்கில் பரோலில் வந்து தலைமறைவான இரு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இருகூர் --- ஒண்டிப்புதூர் ரோட்டை சேர்ந்த சேகர், 48 என்பவர், 2010ல் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், பரோலில் வெளி வந்த அவர் தலைமறைவானார். இதேபோல், 2021ல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செங்கத்துறையை சேர்ந்த கவுதம், 29, பரோலில் வெளியில் வந்து தலைமறைவானார்.
இருவரின் பரோலும் ரத்து செய்யப்பட்டு, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.