/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மைதானம் அருகே குழியால் விபத்து
/
மைதானம் அருகே குழியால் விபத்து
ADDED : ஏப் 15, 2025 08:26 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே உள்ள குழியில் வாகன ஓட்டுநர்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு செல்லும் ரோட்டில், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோட்டில், தங்கமுத்து காலனி அருகே குடிநீர் கசிவு சரிசெய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் எதிர்பாராதவிதமாக குழியில் விழுந்து காயமடைந்தார். அவரை அவ்வழியாக சென்றோர் மீட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி நேதாஜி ரோடு பள்ளி மைதானம் அருகே, ஏற்கனவே குழி தோண்டப்பட்ட இடத்தில், தடுப்பு கட்டப்பட்டுள்ளது. எனினும் போக்குவரத்து நிறைந்த பகுதியில், இதுபோன்று குழி தோண்டி பல நாட்களாக அப்படியே வைத்திருக்காமல், உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.

