/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை மார்க்கெட் சாலையில் அதிவேக வாகனங்களால் விபத்து
/
மதுக்கரை மார்க்கெட் சாலையில் அதிவேக வாகனங்களால் விபத்து
மதுக்கரை மார்க்கெட் சாலையில் அதிவேக வாகனங்களால் விபத்து
மதுக்கரை மார்க்கெட் சாலையில் அதிவேக வாகனங்களால் விபத்து
ADDED : ஆக 21, 2025 09:37 PM
கோவை; கோவை மரப்பாலம் பகுதியில், ரயில்வே கீழ்பால பணிகள் மே 16 முதல் நடந்து வருகின்றன. கோவை -- பாலக்காடு மற்றும் பாலக்காடு - -கோவை செல்லும் வாகனங்கள், மதுக்கரை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி, குவாரி ஆபீஸ் ரோடு, குரும்பபாளையம் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, செட்டிப்பாளையம் பிரிவு சென்று, பாலக்காடு சாலையை அடைகின்றன.
பாலக்காடு -- கோவை மார்க்கமாக, செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி, விறகுக்கடை பாலம் வழியாக ஏ.சி.சி தொழிற்சாலை ரோடு வழியாகச் சென்று, கோவை சாலையை அடைகின்றன.
இதில், மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, செட்டிப்பாளையம் பிரிவு வரை சாலை மிகவும் குறுகியதாக இருக்கிறது. இவ்வழித்தத்தில் பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. சாலையின் எல்லைக்கோட்டை தாண்டி, வாகனங்கள் செல்வதால், பாதசாரிகள் அச்சப்படுகின்றனர்.
இரு நாட்களுக்கு முன், மேட்டாங்காடு பகுதி அருகே, பாலக்காடு சென்று கொண்டிருந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியதில்,, 50 வயதை கடந்தவருக்கும், பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. எனவே, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை, ஆங்காங்கே வேகத்தடை அமைத்தால் மட்டுமே, இச்சாலையில் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, 'மேற்கண்ட சாலையில், போதிய இடங்களில் வேகத்தடை அமைக்க, சாலை பாதுகாப்பு நிதி கேட்டு, கலெக்டருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.நிதி வந்தவுடனோ அல்லது அவசர நிலையை உணர்ந்தோ, விரைவில் வேகத்தடை அமைக்கப்படும்' என்றார்.

