/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து விதிமீறலால் விபத்து
/
போக்குவரத்து விதிமீறலால் விபத்து
ADDED : மே 29, 2025 11:44 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில், ஒரே நேரத்தில், சென்டர்மீடியனில் மோதி நின்ற லாரி, பழுதாகி நின்ற அரசு பஸ் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொள்ளாச்சியில், நகர வளர்ச்சிக்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஏற்படும் நெரிசலால் மக்கள் பரிதவிக்கின்றனர். போதிய ரோடு வசதி இருந்தாலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமலேயே வாகன ஓட்டுநர்கள் செயல்படுகின்றனர்.
நேற்று, போக்குவரத்து அதிகமுள்ள பகல் நேரத்தில், உடுமலை ரோட்டில், சென்டர்மீடியனில் மோதி நின்ற கனரக லாரி, பழுதாகி நின்ற அரசு பஸ் காரணமாக, நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க முற்பட்டால், அரசியல் செல்வாக்கை பயன்படுத்துகின்றனர். இதனால், விதிமீறுவோர் கண்டறியப்பட்டால், போட்டோ எடுத்து, 'இ-சலான்' வாயிலாக அபராதம் விதிக்கப்படுகிறது.
நகரில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், மொபைல்போன்களில் பேசியபடி வாகனங்களை இயக்குதல் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதிவேகத்தில், கட்டுப்பாடின்றி வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால், ரோட்டில் செல்லும் பிற ஓட்டுநர்களும், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுஒருபுறமிருக்க, அவ்வப் போது, பழுதாகி நிற்கும் அரசு பஸ்களாலும் நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.