/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விபத்தில்லா கோவை' விழிப்புணர்வு ஓட்டம்
/
'விபத்தில்லா கோவை' விழிப்புணர்வு ஓட்டம்
ADDED : அக் 04, 2025 11:41 PM

கோவை: உயிர் அமைப்பு, மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில், விபத்தில்லா கோவையை உருவாக்க கடந்த மாதம் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதன் இரண்டாம் கட்டமாக, இன்று ஓட்டம் மற்றும் நடை நிகழ்ச்சி நடக்கிறது.
கோவை நேரு ஸ்டேடியத்தில் காலை 5:45 மணிக்கு, ஐந்து கி.மீ. துார ஓட்டம் துவங்கி, ரேஸ்கோர்ஸ் வழியே மீண்டும் ஸ்டேடியத்தை வந்தடைகிறது. 6 மணிக்கு மூன்று கி.மீ. துார ஓட்டம் ஸ்டேடியத்தில் துவங்கி, கலெக்டர் பங்களா வழியே மீண்டும் ஸ்டேடியம் வந்தடையும்.
ஒரு கி.மீ. துார ஓட்டம் 6.15 மணிக்கு ஸ்டேடியத்தில் துவங்கி, அவ்வளாகத்தை சுற்றி முடிவடைகிறது. அதுபோலவே, 6.30 மணிக்கு ஒரு கி.மீ. துார நடை நிகழ்ச்சி ஸ்டேடியத்தில் துவங்கி அதனுள் முடிவடைகிறது.
இப்போட்டிகளில் எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். கோவை மாவட்ட அத்லெடிக் சங்கத்தின் அங்கீகாரத்துடன் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ உதவிகளை, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மேற்கொள்கிறது. கோயம்புத்துார் சென்ட்ரல் ரோட்டரி கிளப் ஸ்பான்சராக உள்ளது.