/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்டுக்கு 20 ரூபாய் கட்டினால் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
/
ஆண்டுக்கு 20 ரூபாய் கட்டினால் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
ஆண்டுக்கு 20 ரூபாய் கட்டினால் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
ஆண்டுக்கு 20 ரூபாய் கட்டினால் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
ADDED : டிச 07, 2024 05:49 AM
மேட்டுப்பாளையம்; ''ஆண்டுக்கு 20 ரூபாய் கட்டினால், 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும், 436 ரூபாய் கட்டினால், அனைத்து விதமான மரணங்களுக்கும், நிவாரண தொகை வழங்கப்படும்,'' என, பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டல துணை பொது மேலாளர் முகேஷ் குமார் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் பாரத் ஸ்டேட் வங்கியில், பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் இந்த வங்கி கணக்கு வாயிலாக பயனடைந்த பயனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் முகேஷ் குமார் தலைமை வகித்து பேசியதாவது:
பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவதன் வாயிலாக, பொதுமக்களுக்கு ஏராளமான பயன்கள் உள்ளன. குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை, 20 ரூபாய் மட்டுமே கட்டினால், இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு தொகை வழங்கப்படும்.
மேலும், 436 ரூபாய் கட்டினால், அனைத்து விதமான மரணங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும் பென்ஷன் திட்டம் உட்பட மத்திய அரசு திட்டங்கள் இதன் வாயிலாக பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.
மேட்டுப்பாளையம் வங்கியில், இந்த வங்கிக் கணக்கு வைத்திருந்த, இருவர் விபத்திலும், இருவர் இயற்கை மரணம் அடைந்தனர். அவர்கள் குடும்பத்தினருக்கு இத்திட்டத்தின் வாயிலாக, பாரத் ஸ்டேட் வங்கி சார்பில், இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் ரேகா வரவேற்றார். முதன்மை மேலாளர் உமா, வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் முனியப்பன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் கிளை முதன்மை மேலாளர் வனிதா நடராஜ் நன்றி கூறினார்.