/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையில் விபத்து; போக்குவரத்து பாதிப்பு
/
மலைப்பாதையில் விபத்து; போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 03, 2025 09:14 PM

வால்பாறை; மலைப்பாதை ரோட்டில் குறுக்கே நின்ற லாரியால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு லாரி ஒன்று ஜல்லிகற்கள் எற்றிக்கொண்டு சென்றது. நள்ளிரவு, 2:30 மணியளவில் இரண்டாவது கொண்டைஊசி வளைவு அருகே செல்லும் போது, பிரேக் பிடிக்காததால் லாரி பின் நோக்கி வந்து மரத்தின் மீது மோதி, ரோட்டில் குறுக்கே நின்றது.
லாரி டிரைவர் பாலசுப்ரமணியன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தினர்.
இதனால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.