/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி பூஜை
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி பூஜை
ADDED : அக் 03, 2025 09:14 PM
நெகமம்; காட்டம்பட்டிபுதூர் பெருமாள் கோவிலில் இன்று (4ம் தேதி) சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டிபுதூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (4ம் தேதி) சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதில், காலை, 10:00 மணிக்கு, மூலவர் திருமஞ்சனம், காலை, 10:30 மணிக்கு, அலங்கார பூஜைகள் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு, புதிய தேரில் உற்சவர் எழுந்தருளி கோவில் பிரகாரம் சுற்றி பவனி வரும் நிகழ்வு நடக்கிறது.
மதியம், 12:00 மணிக்கு, படையல் வழிபாடு நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு, தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் ஜடாரி ஆசிர்வாதம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.