/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மராத்தான் போட்டியில் அசத்தல்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
மராத்தான் போட்டியில் அசத்தல்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மராத்தான் போட்டியில் அசத்தல்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மராத்தான் போட்டியில் அசத்தல்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : அக் 03, 2025 09:11 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சியில், உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த மராத்தான் போட்டியில், மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்று அசத்தினர்.
பொள்ளாச்சி சாந்தி பள்ளி, தடகள சங்கம், ரோட்டரி கிளப் ஆப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி லேடிஸ் சர்க்கிள், ரவுண்ட் டேபிள் அமைப்புகள் சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி, மராத்தான் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியை நகராட்சித்தலைவர் சியாமளா, கொ.ம.தே.க., மாநில துணை செயலாளர் நித்தியானந்தன் மற்றும் ரோட்டரி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
போட்டிகள், நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன. அதில், 5 - 7 வயது பிரிவு, 8 - 11 பிரிவினருக்கு இரண்டு கி.மீ., துாரம், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஐந்து கி.மீ., துாரம் மற்றும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10 கி.மீ.. துாரம் என நடத்தப்பட்டன.
மகாலிங்கபுரம் ஆர்ச் ரோட்டில் துவங்கி, டி.எஸ்.பி., அலுவலகம், பல்லடம் ரோடு, ராசக்காபாளையம் வரை போட்டி துாரம் நிர்ணயிக்கப்பட்டன. அதில், ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பெற்றோருடன் பங்கேற்று, 'ேஹப்பி வாக்' செல்லும் நிகழ்வு நடைபெற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடினர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'அனைவரிடமும் உடற்பயிற்சிகள் செய்வது குறைந்துள்ளது. சிறுவயது முதல் அனைத்து வயதினரும் உடற்பயிற்சி செய்வதால் உற்சாகம் மேம்படுவதுடன், உடல் நலம் பாதுகாக்கப்படும்.
எனவே, உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தவும், விளையாட்டு திறமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியன்று இப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது,' என்றனர்.