/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால் விபத்து அபாயம்
/
ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 27, 2025 09:32 PM

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறையில் இருந்து அட்டகட்டி வழியாக, ஆழியாறு வரை செல்லும் மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன.இவ்வழித்தடத்தில், நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த பாதையில், விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடுகள் விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும், கொண்டைஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் போது, விபத்து ஏற்படாமல் தடுக்க, குவிக்கண்ணாடிகள் வைக்கபட்டுள்ளன.
இந்நிலையில், சோலையாறு அணை செல்லும் ரோடு, குரங்குமுடி ரோடு, ஆழியாறு வரையிலான நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில், ரோட்டை ஆக்கிரமித்து இருபுறமும் செடிகள் அபரிமிதமாக வளர்ந்துள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் மலைப்பாதையில், ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, வால்பாறையிலிருந்து வரட்டுப்பாறை வழியாக, சோலையாறு அணை செல்லும் ரோட்டிலும், ஆழியாறு செல்லும் ரோட்டிலும் உள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.