/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிவேக வாகனங்களால் விபத்து; போலீஸ் கண்காணிப்பு தேவை
/
அதிவேக வாகனங்களால் விபத்து; போலீஸ் கண்காணிப்பு தேவை
அதிவேக வாகனங்களால் விபத்து; போலீஸ் கண்காணிப்பு தேவை
அதிவேக வாகனங்களால் விபத்து; போலீஸ் கண்காணிப்பு தேவை
ADDED : அக் 19, 2025 10:21 PM

விபத்து அபாயம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ரோட்டில் ஆங்காங்கே வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. மேலும், இப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்து உள்ளது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் பார்க்கிங் செய்வதை ஒழுங்குபடுத்தவும், அதிவேக வாகனங்களுக்கு கடிவாளம் போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- டேவிட்: தடுப்பு அமைக்கப்படுமா? கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில், சேதமடைந்த தடுப்புகள் பல மாதங்களாக வைக்கப்பட்டுள்ளது. இது அடிக்கடி காற்றுக்கு கீழே விழுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் இருந்து சேதமடைந்த தடுப்புகளை அகற்ற வேண்டும். தேவைப்படும் இடங்களில் புதிதாக தடுப்பு அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விக்னேஷ்: ஆக்கிரமிப்பு அகற்றணும் பொள்ளாச்சி, சமத்தூரில் தேவனூர்புதூர் செல்லும் ரோட்டோரம் ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வளைவுப் பகுதியில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் இதை கவனித்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய வேண்டும்.
- ரமேஷ்: ரோட்டில் பள்ளம் பொள்ளாச்சி, இந்திரா நகர் சர்ச் ரோட்டில் இருந்து கோவை மெயின் ரோடு செல்லும் வழியில், ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- முருகன்: சேதமடைந்த ரோடு பொள்ளாச்சி, புளியம்பட்டி -- ஆலம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் தார் ரோடு அமைக்காமல், ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- தினேஷ் ஷங்கர்: இடையூறு வாகனங்கள் உடுமலை கல்பனா ரோட்டில், போக்குவரத்திற்கு இடையூறாக இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன்: நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம் உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில், ரோட்டோரங்களில் சரக்கு வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். இது போக்குவரத்து இடைஞ்சலாக உள்ளது. இவ்வாறு, வாகனங்களை நிறுத்துவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமு: சுகாதாரம் பாதிப்பு உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டில், கடைகளிலிருந்து கழிவுநீர் வெளியே செல்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவக்குமார்: ரவுண்டானா வேண்டும் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் நால் ரோட்டில் போக்குவரத்து அதிகம் இருந்து வருகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, அங்கு ரவுண்டானா அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம்: பராமரிப்பு இல்லை உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரையில், குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை சுத்தம் செய்யாததால், பொலிவிழந்து காணப்படுகிறது. இதை சுத்தம் செய்து, பராமரிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குப்புசாமி: விதிமுறை மீறல் உடுமலையில் இருசக்கர வாகனத்தில் விதிமுறைகளை மீறி கம்புகளை எடுத்துச் செல்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்களில் மோதும் வாய்ப்புள்ளது. விதிமுறை மீறி கம்புகளை எடுத்துச்செல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி: