/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டி
ADDED : அக் 19, 2025 10:21 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையம் சார்பில், 2025-26ம் ஆண்டுக்கான கலைத்திருவிழா போட்டிகள், சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தெற்கு வட்டார வள மையம், வி.எஸ்.ஆர்.ஏ. பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றன.
'பசுமையும், பாரம்பரியமும்' என்ற மைய கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆறு போட்டிகள், 3 - 5ம் வகுப்புகளுக்கு 12 போட்டிகள், 6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 14 போட்டிகள் நடைபெற்றன.
9 - 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 34 போட்டிகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 34 போட்டிகள் நடைபெற்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், குறு வள மைய அளவில் முதலிடமும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களில் பள்ளி அளவில் முதலிடமும் பெற்ற மாணவர்கள், வட்டார வள மைய அளவில் பங்கேற்றனர்.
அதில், மாணவர்கள் நாட்டுப்புற நடனங்கள், கிராமப்புற நடனங்கள், பரத நாட்டியம் என பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன.