/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணியரை வசீகரிக்கும் இருவாச்சி பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
/
சுற்றுலா பயணியரை வசீகரிக்கும் இருவாச்சி பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
சுற்றுலா பயணியரை வசீகரிக்கும் இருவாச்சி பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
சுற்றுலா பயணியரை வசீகரிக்கும் இருவாச்சி பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 19, 2025 10:22 PM

வால்பாறை: வால்பாறையில், உலா வரும் இருவாச்சி பறவைகளை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வனவிலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வால்பாறையில், சில குறிப்பிட்ட எஸ்டேட் பகுதியில் ஹார்ன்பில் என்றழைக்கப்படும் இருவாச்சி பறவைகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ், வில்லோனி, அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இருவாச்சி பறவைகள் மரத்தில் கூடுகட்டி, குடும்பமாக வாழ்பவை. இந்த பறவையின் இனப்பெருக்க காலம் பிப்., முதல் மே மாதம் வரையாகும். 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்தப்பறவை எப்போதும் இணையுடன் தான் வெளியில் செல்லும்.
வால்பாறையில் தன் இணையுடன் சேர்ந்து, இரை தேடும் இருவாச்சி பறவைகளை, சுற்றுலாபயணியர் அதிகளவில் கண்டு ரசிக்கின்றனர்.
இது குறித்து, பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
இந்தியாவை பொறுத்த வரை, மேற்கு தொடர்ச்சிமலையில் தான் இருவாச்சி பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. மலபார் இருவாச்சி, பெரும்பாத இருவாச்சி, சாம்பல்நிற இருவாச்சி உள்ளிட்ட, 54 வகையான பறவைகள் உலக அளவில் உள்ளன.
பூச்சி, பழங்கள், சிறு வனவிலங்குகள் இவற்றின் உணவாகும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த பறவை, தன் இணையை விட்டு ஒரு போதும் பிரியாது. இருவாச்சி பறவையை பொறுத்தவரை ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே இணை சேரும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இருவாச்சி பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வனச்சூழலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு, கூறினர்.