/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 2 மாணவர்கள் தகவல்
/
கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 2 மாணவர்கள் தகவல்
கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 2 மாணவர்கள் தகவல்
கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 2 மாணவர்கள் தகவல்
ADDED : மார் 21, 2025 10:52 PM

அன்னுார்; வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வு கடினமாக இருந்ததாக பிளஸ் 2 மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்னுாரில் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வு நடந்தது.
ஐந்து மதிப்பெண்கேள்விகள் மிகக் கடினம்
நிவேதா, கஞ்சப்பள்ளி:
கணக்குப்பதிவியல் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. இப்பகுதியில் 14 கேள்விகள் கேட்கப்பட்டு ஏழுக்கு பதில் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது.
அதிக மதிப்பெண் பெற முடியாது
கோபிகா, குன்னத்துவாரம்பாளையம்:
கணக்குப்பதிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் பாடத்தின் உள்புறம் இருந்து கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. இரண்டு, மூன்று மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆனால் அதிக மதிப்பெண் பெற முடியாது.
இரண்டு மதிப்பெண் கேள்விகள் கடினம்
விகாசினி, நீலகண்டன் புதூர்:
வேதியியல் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. இரண்டு, மூன்று மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன.
மூன்று, நான்கு மதிப்பெண் கேள்விகள் எளிது
அஸ்வின், ருத்ரியம்பாளையம்:
வேதியியல் தேர்வில், மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளும் சுமாராக கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மதிப்பெண் கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன.