/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தில் கணக்கு
/
100 பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தில் கணக்கு
ADDED : மார் 31, 2025 05:42 AM

கோவை; செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 100 குழந்தைகளுக்கு, அறக்கட்டளை சார்பாக கணக்கு துவக்கி வைக்கப்பட்டது.
கோவையில் செயல்படும், 'நம் தேசம் நம் பெருமை' அறக்கட்டளை சார்பில், சமுதாயப் பணியின் ஒரு அங்கமாக, கடந்த மாதம், கள்ளிமடை அரசு ஆரம்பப் பள்ளியில், 21 பெண் குழந்தைகளுக்கும், இரண்டாவது கட்டமாக, வடவள்ளி அருகேயுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், 30 பெண் குழந்தைகளுக்கும், மூன்றாவது கட்டமாக, சாய்பாபா கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள, அரசு ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 102 பெண் குழந்தைகளுக்கும், செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ரூ.250 செலுத்தி கணக்கு துவக்கி வைத்தனர்.
குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், 'நம் தேசம் நம் பெருமை' அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் முரளிதரன், பொது செயலாளர் சாய் ஸ்ருதி, செயலாளர் வித்யா சுரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு, அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.