/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறுவடை விபரங்களில் துல்லிய தரவுகள் அவசியம்! பயிற்சி முகாமில் அதிகாரிகள் அறிவுரை
/
அறுவடை விபரங்களில் துல்லிய தரவுகள் அவசியம்! பயிற்சி முகாமில் அதிகாரிகள் அறிவுரை
அறுவடை விபரங்களில் துல்லிய தரவுகள் அவசியம்! பயிற்சி முகாமில் அதிகாரிகள் அறிவுரை
அறுவடை விபரங்களில் துல்லிய தரவுகள் அவசியம்! பயிற்சி முகாமில் அதிகாரிகள் அறிவுரை
ADDED : ஜூலை 30, 2025 08:21 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், புள்ளியியல் துறை சார்பில், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில், பயிர் விளைச்சல் மதிப்பீடு செய்வது, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் அறுவை பரிசோதனை மேற்கொள்வது குறித்து புத்துாட்ட பயிற்சி, பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கோவை மாவட்ட புள்ளியியல் துறை இயக்குனர் ஜான் சுந்தரராஜ் தலைமை வகித்தார். கோட்ட புள்ளியியல் துறை உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஸ்ரீதர், தேசிய புள்ளியியல் நிறுவனத்தை சேர்ந்த முதுநிலை புள்ளியியல் அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தின் வாயிலாக, உணவு உற்பத்தி மற்றும் உணவு சார்ந்த கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு எந்தளவு பயன் உள்ளதாக இருக்கின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், பொது பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தில் மொபைல் செயலி வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை, அறுவடை இழப்பின்றி மேற்கொள்ள வேண்டும். துல்லியமான அறுவடை விபரங்கள் அளிப்பது குறித்து விளக்கப்பட்டது. இந்த விபரங்கள் வாயிலாக பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு காப்பீட்டுதொகை வழங்கப்படுகிறது.
எனவே, பரிசோதனை வாயிலாக அளிக்கப்படும் அறுவடை விபரங்கள் துல்லியமான தரவுகளாக அளிக்க வேண்டும்.மேலும், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின், 75வது ஆண்டு சிறப்பு, அந்நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்து விளக்கப்பட்டது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி கோட்ட புள்ளியியல் ஆய்வாளர்கள் பாலாஜி, லிவிங்ஸ்டன், திரவிய குமார், கோகிலபிரியா, வித்யாசங்கரி மற்றும் புள்ளியியல் உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் ஆகியோர் செய்தனர்.