/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
50 வருட மருத்துவ சேவை; டாக்டருக்கு சாதனையாளர் விருது
/
50 வருட மருத்துவ சேவை; டாக்டருக்கு சாதனையாளர் விருது
50 வருட மருத்துவ சேவை; டாக்டருக்கு சாதனையாளர் விருது
50 வருட மருத்துவ சேவை; டாக்டருக்கு சாதனையாளர் விருது
ADDED : ஜன 08, 2024 10:51 PM

சூலுார்;சுல்தான்பேட்டையில், 50 ஆண்டு மருத்துவ சேவை செய்த டாக்டருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் டாக்டர் புருஷோத்தமன்,80. அக்கிராமத்தின் முதல் டாக்டரான அவர், சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் டாக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்ற பின், 1986 ல் சுல்தான்பேட்டையில் கிளினிக் துவக்கி குறைந்த கட்டணத்தில் அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ சேவை செய்து வருகிறார்.
நான்கு தலைமுறைகளுக்கு மருத்துவம் பார்த்து வரும் அவருக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் வின்ட் சிட்டி சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கே.ஜி., மருத்துவமனை சேர்மன் பக்தவத்சலம் விருது வழங்கி கவுரவித்தார். எம்.எல்.ஏ., கந்தசாமி, முன்னாள் எம்.பி., பாலசுப்பிரமணியம், ரோட்டரி தலைவர் சுந்தரவடிவேல், மகாலிங்கம், முத்து மாணிக்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாழ்நாள் முழுவதும் இதே பகுதியில் மருத்துவ சேவை செய்வேன், என, டாக்டர் புருஷோத்தமன் பேசினார்.