ADDED : ஏப் 23, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், ; நெகமம், நாகர் மைதானத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
இதில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பா.ஜ., உடன் கூட்டணி வைத்துள்ளார். 2026 தேர்தலில் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்,'' என்றார்.

