/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாதனை மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் கவுரவம்
/
சாதனை மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் கவுரவம்
ADDED : மே 19, 2025 11:57 PM

கோவை; தமிழ்நாடு பொறியியல் கல்லுாரியின், 41வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினம், கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு தலைமை வகித்த, கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் நித்யா மனோகரன், கல்வியின் வாயிலாக மாணவர்கள் மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தேசிய கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் பிரசன்னா வெங்கடேஷ், தான் கடந்து வந்த பாதையை விவரித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
கல்வி, விளையாட்டு, நுாறு சதவீத தேர்வு முடிவுகள், புத்தகங்களை வெளியிடுவது, காப்புரிமை பெறுவது போன்ற தலைப்புகளில் சாதித்த, பேராசிரியர்கள், மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கல்லுாரியின் தலைவர் ரவி, முதன்மை செயல் அலுவலர் அனுஷா, தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மயிலிறகு சுந்தரராஜன், சாந்தமணி, முதல்வர் சக்திவேல் முருகன்,பேராசிரியர்கள் பங்கேற்றனர்.