/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு
/
காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு
ADDED : டிச 10, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உக்கடம்: உக்கடம் கோட்டைமேடு சமராவ் வீதியை சேர்ந்தவர் நாகேந்திரன், 47. கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கோயிலில் பணியில் நாகேந்திரன் இருந்த போது அவருக்கு தெரிந்த கண்ணன் என்பவர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றார்.
பணி முடிந்து வீட்டுக்கு சென்று பார்த்த போது, மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கதவு, ஜன்னல் கதவில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியது தெரிந்தது. இதில் கதவுகள் சேதமடைந்திருந்தன. புகாரையடுத்து, உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

