/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்
/
எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்
எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்
எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்
ADDED : டிச 10, 2025 07:59 AM
கோவை: சுகாதார பணிகளுடன், எஸ்.ஐ.ஆர். பணிகளையும் கூடுதலாக பார்க்கும் துாய்மை பணியாளர்கள், ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க(துாய்மை பணியாளர் பிரிவு) பொதுச் செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் துாய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி இருப்பது, அதிக பணிச்சுமையை ஏற்படுத்துகிறது.
காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே அவர்களது பணி நேரம். பணி நேரம் முடிந்த பிறகும் எஸ்.ஐ.ஆர்., பணியை இரவு, 10:00 மணி வரை இவர்கள் பார்க்கின்றனர்.
துாய்மை பணியாளர்களின் மீது, இதுபோன்று திணிக்கப்படும் பணிச்சுமையை கட்டாயம் குறைக்க வேண்டும்.
பி.எல்.ஓ., பணியில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.