தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுயநலமில்லாமல், தேச பக்தியுடன் செயல்படுங்கள்

 சுயநலமில்லாமல், தேச பக்தியுடன் செயல்படுங்கள்

 சுயநலமில்லாமல், தேச பக்தியுடன் செயல்படுங்கள்


ADDED : பிப் 18, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலூர்: சுயநலமில்லாமல், தேசபக்தியுடன் சமுதாயத்துக்கு தொண்டு செய்யுங்கள், என, தன்னம்பிக்கை பேச்சாளர் வக்கீல் சுமதி பேசினார்.

பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியின், 34 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. சுவாமினி சிவஞானப் பிரியாம்பா தலைமை வகித்தார்.

உயர் நீதிமன்ற வக்கீல் சுமதி பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் படிப்புடன் தேசபக்தி, தெய்வ சக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.

மொபைல் போன்களில் தேவையில்லாதவற்றை தவிர்த்து, நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை தேடுங்கள்.

நீங்கள் யாராக வேண்டும் என்று உங்கள் மனதை அடிக்கடி கேளுங்கள். அது உங்களுக்கு உன்னதமான வழியை காட்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் படித்த பள்ளிக்கு பெருமை தேடி தாருங்கள்.

சுயநலமில்லாத, பொதுநலத்தோடும், தேச பக்தியுடன் சமுதாயத்துக்கு தொண்டு செய்யுங்கள். வெற்றி உங்களை தேடி வரும், என்றார்.

செயலாளர் ஆத்மராமானந்த மகராஜ், பொருளாளர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியாம்பா, பொறியாளர் பாலசந்திரன், பள்ளி இயக்குனர் சுந்தர நாதன், முதல்வர் வனிதா மணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us