/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமம் கடத்திச் செல்வோர் மீது நடவடிக்கை; கோவை கலெக்டர் திட்டவட்டம்
/
கனிமம் கடத்திச் செல்வோர் மீது நடவடிக்கை; கோவை கலெக்டர் திட்டவட்டம்
கனிமம் கடத்திச் செல்வோர் மீது நடவடிக்கை; கோவை கலெக்டர் திட்டவட்டம்
கனிமம் கடத்திச் செல்வோர் மீது நடவடிக்கை; கோவை கலெக்டர் திட்டவட்டம்
ADDED : ஜூலை 15, 2025 08:49 PM
கோவை; கோவை மாவட்டத்தில் கனிமம் கடத்துவது தெரியவந்தால், எவ்வித இடையூறும் இன்றி, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள், மலைக்குன்றுகள் மற்றும் பட்டா நிலங்களில், கிராவல் மண், செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்பட்டன.
நீதிபதிகள் குழு கள ஆய்வு செய்து உறுதி செய்து, ஐகோர்ட்டில் அறிக்கை செய்ததை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இக்குழு, கோவையில் முகாமிட்டு விசாரித்து வருகிறது.
கனிம கடத்தல் கும்பல் வெவ்வேறு இடங்களில் முகாமிட்டு, கனிமத்தை கடத்திச் செல்வதை தொடர்ந்து வருகிறது.
இதற்கு முன், பேரூர் பகுதியில் இருந்து கனிம வளம் கடத்தப்பட்டது; பின், மதுக்கரை ஏரியாவில் இருந்து கடத்தப்பட்டன. இப்போது, காரமடை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கனிமம் எடுத்துச் செல்வதாக புகார் வருகிறது.
இதுதொடர்பாக, கலெக்டரிடம் கேட்ட போது, 'வருவாய்த்துறை, காவல் துறை, கனிம வளத்துறையினர் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 'சிசி டிவி' கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கனிமம் கடத்திச் செல்வோரை கைது செய்வது, அபராதம் விதிப்பது, வாகனங்கள் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கனிமம் கடத்துவதாக தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். இவ்விஷயத்தில் எவ்வித இடையூறும் கிடையாது. ஏதேனும் இடத்தில் கனிமம் கடத்திச் சென்றால், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.