/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
/
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
ADDED : மார் 09, 2024 07:27 AM
உடுமலை : குழந்தை கடத்தல் சம்பவம் என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில், குழந்தை கடத்தல் முயற்சி; குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம்; குழந்தை கடத்தல் நபர்கள், என பலவாறான தகவல்கள் பரவி வருகிறது.
இது போன்ற பதிவுகளை நம்பி, அப்பாவி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களும் ஆங்காங்கே நடக்கிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சார்பில் சமூக வலை தளங்களில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தை கடத்தல் போன்ற உண்மையில்லாத தகவல்களை, சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம். அனைத்து சமூக வலை தளங்களும் கண்காணிக்கப்படுகிறது. வதந்தியை நம்பி யாரையும் தாக்கக்கூடாது. உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளவும்.
வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அவசர உதவிக்கு 100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிர வேண்டாம்!
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு அறிக்கை:
தமிழகத்தில் வட மாநிலத்தினர் குழந்தைகளை கடத்துவது போன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். மக்களிடம் அச்சமும், பீதியும் ஏற்படுத்தி, சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் சமூக விரோதிகளின் செயல் இது.
இது போன்ற செய்திகளை யாரும் பகிர வேண்டாம். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உதவி தேவைப்பட்டால், 94981 81209 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.