தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘சட்டவிரோத தகவல்களை மறைத்தால் நடவடிக்கை’

‘சட்டவிரோத தகவல்களை மறைத்தால் நடவடிக்கை’

‘சட்டவிரோத தகவல்களை மறைத்தால் நடவடிக்கை’


ADDED : செப் 11, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மேன்பவர் ஏஜென்சீஸ், தனியார் நிறுவன பிரநிதிகள், தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று எஸ்.பி., அலுவலக அரங்கில் நடந்தது. 

‘வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து புதிதாக பணிக்கு சேர்பவர்களின் முழு விபரங்களை பெற்று பதிவேடு பராமரிக்க வேண்டும். அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தெரிவிப்பதுடன், தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

பணியில் சேர்ந்தவர்கள் திடீரென காணாமல் போவது, தகவல் தெரிவிக்காமல் பணியிடம், தங்குமிடத்தை விட்டுச்செல்வது, தொழிலாளர்களிடையே ஏற்படும் மோதல் சம்பவங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும், சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்களை மறைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

போதைப்பொருட்கள் பயன்பாடு, விற்பனை, சந்தேக செயல்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை ஒப்பந்ததாரர்கள் உறுதிசெய்யவும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us