தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிளை தபால் அலுவலகம்  செயல்பட நடவடிக்கை தேவை

 கிளை தபால் அலுவலகம்  செயல்பட நடவடிக்கை தேவை

 கிளை தபால் அலுவலகம்  செயல்பட நடவடிக்கை தேவை


ADDED : பிப் 05, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: 'வடுகபாளையத்தில் கடந்த, 75 ஆண்டுகளாக செயல்பட்ட தபால் அலுவலகத்தை மூடாமல் அங்கேயே மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி நகர வடக்கு தி.மு.க. பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் வடுகபாளையம் பகுதி பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி, வடுகபாளையத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த ஒரு வங்கி வசதியும் இல்லை; பஸ் வசதியும் இல்லை.மாற்றுத்திறனாளிகள், முதியோர், பள்ளி குழந்தைகள், கல்லுாரி மாணவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் இங்கு செயல்படும் கிளை தபால் அலுவலகத்தையே பயன்படுத்துகின்றனர்.

இந்த தபால் அலுவலகத்தில், ஒரு கோடி முதல், 2 கோடி வரை டெபாசிட் உள்ளது. கடந்த, 75 ஆண்டுகளாக செயல்படும் தபால் அலுவலகம் மிக வும் பயனாக உள்ளது. எனவே, இந்த தபால் அலுவலகத்தை மூடக்கூடாது. பொதுமக்கள நலனுக்காக இங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us