/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து ரோடு சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறு; விபத்து தவிர்க்க நடவடிக்கை தேவை
/
ஐந்து ரோடு சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறு; விபத்து தவிர்க்க நடவடிக்கை தேவை
ஐந்து ரோடு சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறு; விபத்து தவிர்க்க நடவடிக்கை தேவை
ஐந்து ரோடு சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறு; விபத்து தவிர்க்க நடவடிக்கை தேவை
ADDED : ஜன 07, 2026 05:48 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு பிரதான வழித்தடமாக உள்ளது. இவ்வழியாக தினமும், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், மகாலிங்கபுரம் அருகே ஐந்து ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் இருந்தும் வாகனங்கள் அவ்வப்போது ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வழியாக அவசரத்துக்கு செல்லும் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வேகமாக வரும் போது, வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
நேற்று காலையில் சரக்கு வாகனம் வேகமாக வந்த நிலையில் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தினமும் பலமுறை நடந்தாலும், இதற்கான தீர்வு காணப்படவில்லை.
கேமராக்கள் பழுது ஐந்து ரோடு சந்திப்பு முக்கியமான பகுதியாக இருந்தாலும், இங்குள்ள கேமராக்கள் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. கேமராக்கள் முறையான இயக்கமின்றி உள்ளதுடன், ஒரு சில கேமராக்கள் இருந்த இடத்தில் இரும்பு கம்பி மட்டுமே உள்ளன.
இதனால், அசம்பாவிதங்கள் நடக்கும் போது யார் மீது தவறு உள்ளது; எந்த வாகனங்கள் மீது தவறு என்பதை கண்டறிய முடியாத நிலை உள்ளது.கேமராக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
போலீசாரும் இல்லை மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு பகுதி அருகே போலீசார் சோதனைச்சாவடி உள்ளது. இது பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. போலீசார், வாகன வழக்குப்பதிவு செய்வதற்கு மட்டும் அங்கு ரோந்து செல்வதும், வழக்குகள் பதிவு செய்த பின்னர் கலைந்து சென்று விடுகின்றனர்.
அங்கு விபத்துகள், நெரிசலை தவிர்க்க தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஐந்து ரோடு சந்திப்பில், விபத்துகள், நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.

