/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிப்பண்ணை மீது நடவடிக்கை; அனிக்கடவு மக்கள் கலெக்டரிடம் மனு
/
கோழிப்பண்ணை மீது நடவடிக்கை; அனிக்கடவு மக்கள் கலெக்டரிடம் மனு
கோழிப்பண்ணை மீது நடவடிக்கை; அனிக்கடவு மக்கள் கலெக்டரிடம் மனு
கோழிப்பண்ணை மீது நடவடிக்கை; அனிக்கடவு மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : அக் 13, 2024 10:04 PM

சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கோழிப்பண்ணை மீது நடவடிக்கை எடுக்க கோரி அனிக்கடவு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
உடுமலை அடுத்த அனிக்கடவு கிராம மக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு கிராமத்தில், மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல், கோழிப்பண்ணையை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த பண்ணைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோழிப்பண்ணையை ஆய்வு செய்து எட்டு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டது.
கோழிப்பண்ணை உரிமையாளர் தி.மு.க., பிரமுகர் என்பதால், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தொடர்ந்து விதிமுறையை மீறி கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர். ஊர் பொதுமக்கள் சார்பில், ஆர்.ஐ., - தாசில்தார் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை.
குடியிருப்பு பகுதியில், சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கோழிப்பண்ணை மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -