sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சுகாதார நிலையத்தில் கணவருடன் வசித்த செவிலியர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

/

 சுகாதார நிலையத்தில் கணவருடன் வசித்த செவிலியர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

 சுகாதார நிலையத்தில் கணவருடன் வசித்த செவிலியர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

 சுகாதார நிலையத்தில் கணவருடன் வசித்த செவிலியர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு


ADDED : மார் 10, 2026 02:41 AM

Google News

ADDED : மார் 10, 2026 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'கோவை மாநகராட்சி, வடவள்ளி துணை சுகாதார நிலைய கட்டடத்தில், கணவருடன் வசித்த, நகர்ப்புற சுகாதார செவிலியர் மீது, துறை ரீதியாக, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கோவை மாநகராட்சி, வடவவள்ளி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டப்பட்டு, பிப்., 14ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டடம் நான்கு அறைகளை கொண்டது.

துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், துணை சுகாதார நிலைய கட்டடத்தில், சுனிதா என்ற நகர்ப்புற சுகாதார செவிலியர் குடியமர்த்தம் செய்யப்பட்டார்.

இங்கு, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை, கர்ப்பிணியருக்கு பரிசோதனை, புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் சிறு உபாதைகளுக்கான சிகிச்சைகள் தினமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சுனிதாவின் கணவர் ஷ்யாம்சுந்தர், அந்த கட்டடத்தை குடியிருப்பாக பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டது. கட்டடத்தை ஆய்வு செய்தபோது, சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில், சுனிதா மற்றும் ஷ்யாம்சுந்தர், வீட்டு உபயோக பொருட்களை வைத்திருந்தனர்.

அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கவனிக்க தவறிய, மாநகர சுகாதார ஆய்வாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நான்கு அறைகளில், இரண்டு அறைகளை, பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்க வேண்டும். இரண்டு அறைகளை தங்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை அறைகளுக்கும், குடியிருப்பு பகுதிக்கும் இடையில், தடுப்பு சுவர் ஏற்படுத்தவும், குடியிருப்பு பகுதிக்கு, தனி வாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஷ்யாம்சுந்தர், தி.மு.க., வடவள்ளி பகுதி பொறியாளர் அணி துணை அமைப்பாளர் என்பதால், அதிகார துஷ்பிரயோகம் செய்து, அரசு கட்டடத்தை ஆக்கிரமித்ததாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us