/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியரசு தின விடுமுறை விடாத 192 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
குடியரசு தின விடுமுறை விடாத 192 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குடியரசு தின விடுமுறை விடாத 192 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குடியரசு தின விடுமுறை விடாத 192 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 27, 2026 03:01 PM
கோவை: குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காமல், முன் அனுமதி பெறாமல் இயக்கிய 192 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து நிறுவனங்களும் ஜன., 26, மே 1, ஆக., 15, அக்., 2 ஆகிய தேதிகள் மற்றும் குறைந்தது ஐந்து பண்டிகை நாட்கள் என மொத்தம் 9விடுமுறை தினங்களில், சம்பளத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இந்த நாட்களில் தொழிலாளர்கள் பணிபுரிய, தொழிலாளர் ஆய்வர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பாக நேற்று, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் 248 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், 192 நிறுவனங்களில், தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காதது தெரியவந்தது. அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.