/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் ஆபத்து நிலை கர்ப்பிணிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
/
உயர் ஆபத்து நிலை கர்ப்பிணிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
உயர் ஆபத்து நிலை கர்ப்பிணிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
உயர் ஆபத்து நிலை கர்ப்பிணிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
ADDED : ஜன 30, 2024 12:21 AM
கோவை:கிராமப்புறங்களில் இருக்கும் உயர் ஆபத்து நிலை கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார துறை சார்பில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் கர்ப்பிணிகள், சிசு இறப்பு விகிதத்தை குறைக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை, 2021 - 22ம் ஆண்டில் லட்சத்துக்கு, 90 ஆக இறந்த கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், 2023 - 24 ல், 52 ஆக குறைந்துள்ளது.இவ்விகிதத்தை மேலும் குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் தொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு, உடல்நிலை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பது தெரிந்தது.
கிராமப்புற செவிலியர்கள் வழங்கும் அறிவுரைகள், வழங்கும் மருந்துகளை கர்ப்பிணிகள் முறையாக எடுத்துக் கொள்ளாததும் தெரிந்தது.
குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு உள்ள கர்ப்பிணிகள் அதுகுறித்து, போதிய விழிப்புணர்வு இன்றிஇருப்பதும்தெரிந்தது. இதையடுத்து, கிராமப்புற உயர் ஆபத்து நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.