/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணியூர் டோல்கேட் கழிவறை பராமரிக்க நடவடிக்கை
/
கணியூர் டோல்கேட் கழிவறை பராமரிக்க நடவடிக்கை
ADDED : ஜன 07, 2024 09:06 PM
கருமத்தம்பட்டி:'கணியூர் டோல்கேட் பகுதியில் உள்ள கழிவறைகள் விரைவில் சீரமைக்கப்படும்,' என, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
பொன்னாண்டாம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார், கணியூர் டோல்கேட்டில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், சாலை பயணிகள் அவதிப்படுவதாகவும், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், 'கணியூரில் உள்ள தேனீர் விடுதி மற்றும் கழிவறைகளை பராமரிக்க புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள், அவர்கள் அங்குள்ள தேனீர் விடுதி மற்றும் கழிவறைகளில் பராமரிப்பு பணியை மேற்கொண்டு, சாலை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்கள்,' என, கூறப்பட்டுள்ளது