/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாரம்தோறும் வானிலை அறிக்கை குரல் பதிவாக வழங்க நடவடிக்கை
/
வாரம்தோறும் வானிலை அறிக்கை குரல் பதிவாக வழங்க நடவடிக்கை
வாரம்தோறும் வானிலை அறிக்கை குரல் பதிவாக வழங்க நடவடிக்கை
வாரம்தோறும் வானிலை அறிக்கை குரல் பதிவாக வழங்க நடவடிக்கை
ADDED : ஜன 03, 2024 11:58 PM
உடுமலை : விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 'வாய்ஸ் மெசேஜ்' வாயிலாக, காலநிலை ஆராய்ச்சி மையம், வானிலை அறிக்கையை சமர்பித்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் மற்றும் கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூர் மாவட்டத்துக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
இது, செய்தி ஊடகங்கள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய 'வாட்ஸ் ஆப்', டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, துாத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மாநிலம் முழுக்க உள்ள மக்கள் மத்தியில் அச்சத்தையும், ஒரு வித அசாதாரண சூழலையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில், இதுநாள் அறிக்கை வாயிலாக, வாராந்திர வானிலை அறிக்கை வழங்கி வந்த, வேளாண் பல்கலை கழக, வேளாண் ஆராய்ச்சி மையம், தற்போது குரல் பதிவு 9 (வாய்ஸ் மெசேஜ்) வாயிலாகவும், வாராந்திர வானிலை அறிக்கையை வழங்கி வருகிறது.