/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆப்ரேஷன் தியேட்டரில் பணியாற்ற கூடுதலாக உதவியாளர்கள் நியமனம்
/
ஆப்ரேஷன் தியேட்டரில் பணியாற்ற கூடுதலாக உதவியாளர்கள் நியமனம்
ஆப்ரேஷன் தியேட்டரில் பணியாற்ற கூடுதலாக உதவியாளர்கள் நியமனம்
ஆப்ரேஷன் தியேட்டரில் பணியாற்ற கூடுதலாக உதவியாளர்கள் நியமனம்
ADDED : செப் 05, 2025 09:43 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், 1,500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்காக, 462 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, பிரசவம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, முதுகுத்தண்டு என பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, மூன்று ஆப்ரேஷன் தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, உதவியாளர்கள் மூன்று ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர்.
ஆனால், ஒரு ஆப்ரேஷன் தியேட்டருக்கு, தலா இருவர் வீதம் 6 உதவியாளர்கள் இருக்க வேண்டும். பல மாதங்களாக, 4 பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.
மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில், செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களில், பொது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதில், 10 முதல் 15 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு ஆப்ரேஷன் தியேட்டருக்கு இரு உதவியாளர்கள் தேவை. மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட நான்கு பேர் மட்டுமே பணியில் இருந்த நிலையில், கூடுதலாக மூன்று பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இனி மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவில், பெண்கள் மட்டுமே பணியில் இருப்பர். போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், சக பணியாளர்களின் பணிச்சுமை குறைந்துள்ளது. இவ்வாறு, கூறினர்.