/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர்: சுகாதார பாதிப்பால் மக்கள் அவதி
/
ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர்: சுகாதார பாதிப்பால் மக்கள் அவதி
ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர்: சுகாதார பாதிப்பால் மக்கள் அவதி
ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர்: சுகாதார பாதிப்பால் மக்கள் அவதி
ADDED : செப் 05, 2025 09:42 PM

நெகமம், ; நெகமம், கொண்டேகவுண்டன்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நெகமம் அருகே, கொண்டேகவுண்டன்பாளையம் அம்பேத்கர் வீதியில், கழிவு நீர் கால்வாயை, அதே பகுதியை சிலர் மண் மற்றும் கற்கள் கொண்டு அடைத்துள்ளனர். இதனால், கழிவு நீரானது ரோட்டில் செல்கிறது.
கழிவுநீரை மிதித்தபடியே மக்கள் செல்லும் நிலை உள்ளது. இத்துடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது, பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.
அதன்பின், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என கூறிச் சென்றனர். அதேபோன்று, இரண்டு நாட்கள் மட்டும் கழிவுநீர் ரோட்டில் செல்லவில்லை. அதன்பின், மீண்டும் ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
இது பற்றி, மீண்டும் அதிகாரிகளிடம் தெரிவித்தால், மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் அலட்சியமாக உள்ளார்கள். மக்கள் நலன் கருதி அடைக்கப்பட்டிருக்கும் கால்வாய் பகுதியை சீரமைத்து, ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீரை கால்வாயில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குடும்ப பிரச்னை காரணமாக, கால்வாயை அடைத்து வைத்திருக்கிறார்கள். ரோட்டில் கழிவு நீர் செல்வதை தவிர்க்க, புதிதாக கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கால்வாய் கட்டும் பணி துவங்கும்,' என்றனர்.