மேட்டுப்பாளையம் 'மெமு'வில் கூடுதல் பெட்டிகள் எதிர்பார்ப்பு
மேட்டுப்பாளையம் 'மெமு'வில் கூடுதல் பெட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 09, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
கோவை:கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான மெமு ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் நலச்சங்க பொது செயலாளர் சுப்ரமணியன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,'மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் மெமு ரயில் எட்டு பெட்டிகளுடன் இயங்குகிறது. நாளுக்கு நாள் இந்த ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வண்டியை 12 பெட்டிகளுடன் இயக்குமாறு மேட்டுப்பாளையம், காரமடை, கோவை பயணிகள் நீண்டகாலமாக கேட்கின்றனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தெற்கு ரயில்வேயில் கோவை ஸ்டேஷன் மிக அதிக வருவாய் ஈட்டுகிறது. எனவே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்குமாறு வேண்டுகிறோம்' என, தெரிவித்துள்ளார்.
