ADDED : பிப் 19, 2025 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுாரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் போதுமான இட வசதி இல்லாததால் வாசகர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் இந்த நூலகத்தில் டிஜிட்டல் லைப்ரரி ஏற்படுத்த வேண்டும். கூடுதலாக கணினிகள் பொருத்த வேண்டும் என வாசகர்கள் கோரி வந்தன.
இந்நிலையில் இங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது. '
இதனால் அதிக இட வசதி கிடைக்கும்' என்பதால் வாசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

