/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுப்புணி - கோவை இடையே கூடுதல் பஸ்; எம்.எல்.ஏ. கடிதம்
/
நடுப்புணி - கோவை இடையே கூடுதல் பஸ்; எம்.எல்.ஏ. கடிதம்
நடுப்புணி - கோவை இடையே கூடுதல் பஸ்; எம்.எல்.ஏ. கடிதம்
நடுப்புணி - கோவை இடையே கூடுதல் பஸ்; எம்.எல்.ஏ. கடிதம்
ADDED : நவ 27, 2025 01:40 AM
பொள்ளாச்சி: நடுப்புணியில் இருந்து சூலக்கல், கிணத்துக்கடவு வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும், என எம்.எல்.ஏ. ஜெயராமன் வலியுறுத்தி உள்ளார்.
எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி சட்டசபை தொகுதி, கேரளா மாநில எல்லையான நடுப்புணியில் இருந்து சூலக்கல், கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு தினமும் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.
தற்போது, இந்த ரோட்டில், ஒரே ஒரு முறை மட்டும் கோவை நோக்கி பஸ் சேவை இயங்குவதால் பயணியருக்கு சிரமமாக உள்ளது.இந்த பஸ் சேவையை அதிகரித்து, நாள் முழுவதும் பயணியர் நெருக்கடியை குறைக்கும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
கிணத்துக்கடவு வரை குறைந்த துார பஸ் சேவையை, 60 நிமிடத்துக்கு ஒரு முறை இயக்க வேண்டும்.இந்த சேவை அதிகரிப்பட்டால், சூலக் கல் மாரியம்மன் கோவில், கனககிரி பொன்மலை வேலாயுதசுவாமி கோவில், புரவிபாளையம் கோடிசுவாமி கோவில் போன்ற ஆன்மிக தலங்களுக்கு சென்று வர பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

