ADDED : ஏப் 24, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
கோவை: தேர்தலையொட்டி சொந்த ஊர் சென்றுவிட்டு திரும்பும் பயணிகளின் நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, தேனி, பழனி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு கடந்த 21ம் தேதி 420 நடைகள், 22ம் தேதி 640 நடைகள் என பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தாலும், மாநிலம் முழுவதும் போதுமான அளவில் பஸ் வசதி இல்லை என புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஓட்டளித்துவிட்டு திரும்பும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டதால், சனி இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் கூடுதலாக பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
