/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதலாக கேமராக்கள் பொருத்தணும்!
/
கூடுதலாக கேமராக்கள் பொருத்தணும்!
ADDED : அக் 24, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்க, முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஒரு சில இடங்களில் இந்த கேமராக்கள் பராமரிப்பு இல்லாததால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு முடங்கியுள்ளன. இதை சரி செய்தாலும், மீண்டும் இதே பிரச்னை ஏற்படுகிறது. ஒரு சில கேமராக்கள் பல மாதங்களாக சர்வீஸ் செய்யப்படாமல், காட்சிப்பொருளாக உள்ளன.
இருக்கும் கேமராக்களை சீரமைத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதலாக கேமராக்கள் பொருத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

