தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : முறைப்படுத்த கோரிக்கை

 ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : முறைப்படுத்த கோரிக்கை

 ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : முறைப்படுத்த கோரிக்கை


ADDED : மார் 02, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுடேம் உள்ளிட்ட பகுதிகளில், 60க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில் ,சமீப காலமாக ஆட்டோக்களில் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவில் ஏறி, இறங்கினாலே, 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆட்டோக்களை கண்டாலே மக்கள் அலறியடித்து ஓடும் நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது:

வால்பாறை மலைப்பகுதியில் உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் அதிக அளவில் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான ஆட்டோக்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தவேண்டும். குறைந்த பட்சமாக ஒரு கி.மீ., துாரத்திற்கு, 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

அனைத்து ஆட்டோ டிரைவர்களும் சீருடை அணிந்து, பெயருடன் கூடி பேட்ஜ் அணிய வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், கட்டணத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us