/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை
/
மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை
ADDED : டிச 03, 2024 11:36 PM
கோவை; கோவை மாநகராட்சி, 100வது வார்டு, கணேசபுரம் முல்லை நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், ரூ.62.60 லட்சத்தில் கட்டப்பட்ட நான்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் யோகா மையத்தை, மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின், மாணவ - மாணவியருடன் உரையாடி விட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.
பின், 99வது வார்டு கோணவாய்க்கால்பாளையத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளலுார் உரக்கிடங்கு பகுதியில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தெற்கு மண்டல உதவி கமிஷனர் குமரன், நிர்வாக பொறியாளர் இளங்கோவன், உட்பட பலர் பங்கேற்றனர்.