/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஏப் 09, 2025 10:18 PM

பொள்ளாச்சி; 'பாலக்காட்டில் இருந்து திருச்செந்துாருக்கு இயக்கப்படும் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்,' என, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., மனு கொடுத்தார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து, ரயில்வே சம்பந்தமாக கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உடன் இருந்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி, வடுகபாளையம் செல்வகுமார் நகர் விஸ்தரிப்பு பகுதியில், எல்.சி., 123ல் உள்ள ரயில்வே கேட்டுக்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். இதற்கு மாநில அரசு, 50 சதவீதமும், மத்திய ரயில்வே துறை, 50 சதவீதமும் நிதி ஒதுக்க வேண்டும்.
பாலக்காட்டில் இருந்து, பொள்ளாச்சி வழியாக திருச்செந்துார் செல்லும் ரயிலில், ஐந்து ஸ்லீப்பர் கோச் பெட்டிகளும், இரண்டு, மூன்றாம் ஏசி மற்றும் இரண்டாம் ஏசி பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து, கோவை செல்லும் பயணியர் ரயிலை, மேட்டுப்பாளையம் வரை இயக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் ரயிலை, பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து, கோவை, சேலம் வழியாக சென்னைக்கு தினமும் இரவு நேர ரயில் சேவை துவங்க வேண்டும்.கோவையில் இருந்து, பொள்ளாச்சி, பழநி வழியாக ராமேஸ்வரம் வரை ஏற்கனவே இயங்கிய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, கோவை - தாம்பரம் வரை ஏற்கனவே இயங்கி கொண்டு இருந்த ரயில்களை பள்ளி, கல்லுாரி கோடை விடுமுறையின் காரணமாக உடனடியாக இயக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

