ADDED : பிப் 02, 2024 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சிகளின் பதிவேடுகளை ஆய்வு செய்யும் பணி நேற்று துவங்கியது. ஊராட்சி கணக்கு, ஒன்றிய நிதி, 15வது நிதி குழு மானியம் உள்ளிட்ட 13 வகையான ஊராட்சிகளின் பதிவேடுகளை கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் நேற்று ஆய்வு செய்தார்.
அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளில் இருந்தும் பதிவேடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆய்வில், மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, செந்தில் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கான பதிவேடுகளும், நடப்பாண்டு பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

