ADDED : மே 28, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)சங்கேத் பல்வன் வந்த் வாஹே நேற்று அன்னுார் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
கரியாம்பாளையம் மற்றும் காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த மசாண்டிபாளையம் சாலை முதல் கதவுகரை- வெள்ளாளபாளையம் சாலை வரை 69 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியை ஆய்வு செய்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் தங்கமணி, சந்திரகலா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.